×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர், படகுகளை விடுவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: இலங்கை அதிபர்அனுர குமார திசநாயக்கே, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மனிதநேயத்தின் அடிப்படையிலும் அமைதி வழியிலும் தீர்வுகாண்பது குறித்தும், மோதலைத் தவிர்ப்பதை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நிகழ்த்தியது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் அனுர குமார திசநாயக்கே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வதையும், பிடித்து வைத்துள்ள அவர்களது படகுகளை விடுவிப்பதையும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கை இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை விதைப்பதுடன், நமது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுக்கும் அமைதியான எதிர்காலத்துக்கும் வழிவகுப்பதில் ஆக்கப்பூர்வமான நகர்வாக அமையும்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர், படகுகளை விடுவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,CM ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Narendra Modi ,President ,Anura Kumara Dissanayake ,Anura… ,Dinakaran ,
× RELATED அபராத தொகை கட்டாததால் விடுதலையான...