- உதயநிதி ஸ்டாலின்
- டாஸ்மாக் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
- அருமனை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- குமாரி மாவட்டம்
- தேவசகாயம் நலன்புரி நிலையம்
- கரோட்
- டாஸ்மாக் டிஎம்சி மாவட்டம்...
- தின மலர்
அருமனை, டிச.17: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் காரோடு பகுதியில் உள்ள தேவசகாயம் நல்வாழ்வு மையத்தில் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஷாடி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட பிரதிநிதி மனோகரன், மேல்புறம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வேதசிரோன்மணி, மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்புறம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட டாஸ்மாக் தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் பாஸ்கர், பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் கோபகுமார் மற்றும் உறுப்பினர்கள் கிறிஸ்துராஜன், சேகர், ஜெஸ்டின், கவுன்சிலர் விஜயகிருஷ்ணன் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.