×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன: கலெக்டர் உடனடி நடவடிக்கை

திருவள்ளூர்: மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து 465 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுப்பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 465 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 165 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 66 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 42 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 87 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 105 மனுக்களும் என மொத்தம் 465 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் (பொது), தனித்துணை கலெக்டர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளுர் ஆ.கற்பகம், திருத்தணி க.தீபா, தனித்துணை கலெக்டர் (நிலம்) செல்வராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன: கலெக்டர் உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Public Grievance Day Meeting ,Thiruvallur ,Grievance Day ,Thiruvallur District Collector's Office ,District ,T. Prabushankar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!