×

கத்தியுடன் ரகளை 2 ரவுடி கைது

பெரம்பூர்: கத்தியுடன் ரகளை செய்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புளியந்தோப்பு காந்தி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் சிவா (19), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலை வழியாக சென்றபோது கத்தியை காட்டி மிரட்டி, இவரிடம் இருந்த 500 ரூபாயை 2 பேர் பறித்தனர்.

இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சிவா புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கங்கா கணேஷ் (19), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (19) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கத்தியுடன் ரகளை 2 ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Siva ,9th Street, Pulianthope ,Gandhi Nagar ,Pulianthope ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...