×

கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவிக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த 23ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைகேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மாணவியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு நேற்று மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Mathur ,Krishnagiri district ,Mathur government… ,
× RELATED 400 கிலோ குட்கா காருடன் பறிமுதல்