×

பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர் மழை காரணமாக சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. எரிக்கான நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால் உபரிநீர் திறப்பு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய அவர்; ஏரியில் கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். குப்பை மற்றும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை மக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூடுதலாக நிதியை பெற்று எஞ்சிய சில நீர்நிலைகளும் தூர்வாரப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வின் போது அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்டோரும் இருந்தனர்.

The post பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,Chembarambakkam lake ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்