×

ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை வரமாக கேட்பேன்: ராமதாஸ் பேச்சு

சென்னை: ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு செல்லக் கூடாது என்பதை வரமாக கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கோ.விசுவநாதன் வெளியிட விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏற்புரையாற்றிய நிறுவனர் ராமதாஸ்:

மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு செல்லக் கூடாது என்பதை வரமாக கேட்பேன். மேலும் எங்கும் கஞ்சா விற்க கூடாது என கேட்பேன்.ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதே போல, வாக்குக்கு பணம் இல்லாத தேர்தல் என்கிற சட்டமும் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு ரூபாய் அளித்தாலும் 10 ஆண்டுகள் சிறை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை வரமாக கேட்பேன்: ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ramadoss' ,Chennai ,PMK ,Ramadoss ,Chennai… ,Dinakaran ,
× RELATED துணைவேந்தர் நியமனம்.....