விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பள்ளி மாணவிகளில் ஒரு மாணவி உயிரிழந்தார். புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12ம் வகுப்பு மாணவி நர்மதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவியான அனுஸ்ரீயை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மீறி ஆற்றில் குளித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
The post ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பள்ளி மாணவிகளில் ஒரு மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.