- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
- முதல்வர்
- எம். கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே
- ஸ்டாலின்
* சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க மற்றும் பழுதுபார்க்க ரூ.3.61 கோடிக்கான நிதியை காசோலையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தலைமைச்செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல்,
பழுதுபார்த்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைத்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டங்களின் கீழ் ரூ. 3 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 208க்கான காசோலைகளை தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடமும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.80 லட்சம் ரூபாய்கான காசோலைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுமட்டுமல்லாது, 2024 – 2025ம் ஆண்டில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் ரூ.75 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இக்கழகத்தின் மூலம், சுயதொழில் செய்ய தனிநபர் கடனாக 2 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், சிறுபான்மையினர் 103 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கபட்டுள்ளது.
இதற்கு சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிழ்கள் பெற்ற நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் தாரேஸ் அஹமத் பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் சுரேஷ் குமார், சிறுபான்மையினர் நல இயக்குநர் ஆசியா மரியம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பெர்னான்டஸ் ரத்தின ராஜா, கிறிஸ்தவ தேவலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் விஜிலா சத்தியானந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க ரூ.3.61 கோடி நிதியுதவி appeared first on Dinakaran.