×

மெட்ரோ ரயில் மின், இயந்திர அமைப்பு பணிக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டருக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.

இதில் வழித்தடம் 5ல் மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் ஜெக்சன் லிமிட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அமைப்புகள் மற்றும் இயக்கம் ராஜேஷ் சதுர்வேதி, ஜெக்சன் லிமிட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

The post மெட்ரோ ரயில் மின், இயந்திர அமைப்பு பணிக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,Chennai ,Marina Lighthouse ,Poonamalli Bypass ,Madhavaram ,Siruseri Chipkot ,
× RELATED பயணிகள் கவனத்திற்கு: சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது