×

காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும்: சென்னையில் கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் பேட்டி!!

சென்னை: அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்துப்பகுதியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் தென் தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வலுவிழக்கக்கூடும். நெல்லை மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும். வங்கக்கடலில் டிச.16-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. ஒரே நாளில் பரவலாக மழை பெய்ததால் மழை அளவு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கான இயல்பான வடகிழக்கு பருவமழை 40 செ.மீ. என்ற நிலையில் இந்த ஆண்டு 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 32% அதிகம். அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்தே சென்னை மழை அளவு கணிக்க முடியும். சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 29 இடங்களில் கனமழை பதிவு. 5 மாவட்டங்களில் மிக அதிகமாகவும், 22 மாவட்டங்களில் அதிகமாகவும், 13 மாவட்டங்களில் இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நகர்வதால் வடகடலோர மாவட்டங்களில் 17, 18 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

The post காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும்: சென்னையில் கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nella district ,Balachandran ,South Zone ,President ,the Meteorological ,Centre ,President of the Meteorological Centre ,
× RELATED ஆற்றுமணலை கடத்திய மணல் கொள்ளையர்களை...