திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்வான கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது, அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வர உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை மகா தீபம்: விவரங்கள் அடங்கிய tag..குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை! appeared first on Dinakaran.