×

மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம்

 

திருப்பரங்குன்றம், டிச. 13: திருப்பரங்குன்றத்தில், மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குழு கூட்டம், தலைவர் சுவிதா விமல் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்க்கு மண்டல குழு தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார்,

இதில் உதவி ஆணையாளர் ராதா, உதவி செயற்பொறியாளர்கள் இந்திரா தேவி, சுப்பிரமணியன், உதவி திட்டமிடுனர் சாந்தி, உதவி வருவாய் அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். அதற்கு பதிலளித்த மண்டல தலைவர் சுவிதா விமல் ‘மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

The post மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Corporation West Zone Meeting ,Thiruparankundram ,Madurai Corporation West Zone ,Committee ,Chairperson ,Suvita Wimal ,Madurai Corporation ,West Zone ,Corporation Zone Office ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி...