×

அதிமுக பஞ். தலைவரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

கோவை: அதிமுக ஊராட்சி தலைவரை கண்டித்து அன்னூரில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அல்லபாளையம் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவுகிறது. மேலும் காலனியில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. காலனிக்குள் கான்கிரீட் சாலை அமைக்கப்படவில்லை.இது குறித்து அதிமுகவின் வடக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் ஊராட்சித் தலைவருமான வெங்கடபதியிடம் பலமுறை இது குறித்து புகார் அளித்துள்ளனர். நேரிலும், கிராம சபைக் கூட்டத்திலும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 10ம் தேதி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதிமுக ஊராட்சி தலைவர் வெங்கடபதியும், ஒன்றிய அதிகாரிகளும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அந்த தொகையை ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்து அதன் வாயிலாக பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர போராட்டம் துவக்கினர். முதல் கட்டமாக அன்னூர் பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என அனைவரிடமும் பிச்சை எடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வசூலான தொகையை ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post அதிமுக பஞ். தலைவரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK Panj ,Coimbatore ,Annoor ,ADMK ,Dinakaran ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...