×

ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்: அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் முறையீடு

சென்னை: ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன் என்று நாகேந்திரன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும் 20ம் தேதிக்குள் தள்ளி வைத்தார்.

அப்போது நீதிபதியிடம் முறையிட்ட நாகேந்திரன், வேலூர் சிறையில் இருந்து வருகிறேன். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை. ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை காவல்துறை சிறையில் வைத்தே கொல்ல பார்க்கிறது என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, உணர்ச்சிப்பூர்வமாக பேச வேண்டாம், இந்த வழக்கின் விசாரணை நியாமான முறையில் நடத்தப்படும். வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்னர், நாகேந்திரனை சிறை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை வரும் 20ம் தேதி தள்ளி வைத்தார்.

The post ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்: அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Nagendran ,Sessions Court ,Chennai ,Chennai Principal Sessions Court ,Bahujan Samaj Party ,president ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு