×

வேலையில்லாத தையல்காரன் செய்யும் செயல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது யானைக்கு டவுசர் தைத்த கதை: ஒன்றிய அரசை வறுத்தெடுத்த சீமான்

அவனியாபுரம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில், இந்தியா ஒரே நாடா என்று கேட்டாலே அவர்களிடம் பதில் இல்லை. தமிழகத்தில் மட்டும் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால், வட மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது ஒரே தேதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றதா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனென்றால் உங்களால் நடத்த முடியவில்லை. நாங்களும் விசிகவும் அங்கீகாரம் பெற்ற கட்சிகள்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் எங்களுக்கு அங்கீகார கடிதம் வந்து சேரவில்லை. கேட்டால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் என்பதால் நேரமில்லை என்கிறார்கள். இரண்டு மாநில தேர்தலுக்கே அவ்வளவு வேலை உள்ளது என்கிறீர்கள். ஒருவேளை நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் வெளியேறி ஆட்சி கலைந்தால் மீண்டும் நாடெங்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைப்பீர்களா. இது, வேலையில்லாத தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதையை போல் உள்ளது. இதனால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. நிச்சயம் இது ஒரு வெட்டி வேலை. இவ்வாறு தெரிவித்தார்.

The post வேலையில்லாத தையல்காரன் செய்யும் செயல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது யானைக்கு டவுசர் தைத்த கதை: ஒன்றிய அரசை வறுத்தெடுத்த சீமான் appeared first on Dinakaran.

Tags : SEAMAN ,AVANIAPURAM ,SEEMAN ,MADURA ,INDIA ,Tamil Nadu ,Union Government ,
× RELATED திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்