×

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யகூடாது: அயன்புரம் வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

சென்னை: அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு விழா சென்னை அயன்புரத்தில் நிறுவன தலைவர் வே.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. சங்க தலைவர் சி.மகேஸ்வரன் ஆண்டறிக்கையும், வரவு-செலவு கணக்குகளை பொருளாளர் எல்.சுப்புராஜும் வாசித்தனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ்குமார், சென்னை மண்டல தலைவர் அருணாசலமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் செந்தில் முருகன், எம்.நாகராஜன், பழம் பொருள் அணி தலைவர் பொன்.கருக்குராஜன், மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் செலவில் 2,50,000 ரூபாய்க்கான லைப் இன்சூரன்ஸ் எடுத்து பிரிமிய தொகையை ஆண்டுதோறும் சங்கமே கட்டும். வியாபாரிகள் நடத்தி வரும் கடை வாடகை தொகையிலிருந்து 18 சதவீத ஜிஎஸ்டியை கட்ட வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்பபெறவேண்டும். கடை லைசென்ஸ் தொகை 1250 ரூபாயாக இருந்ததை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை சங்க வியாபாரிகள் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யகூடாது: அயன்புரம் வியாபாரிகள் சங்கம் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ayanpuram Traders Association ,CHENNAI ,Ayanpuram Traders Welfare Association ,Ayanpuram, Chennai ,V. Selvanayagam ,C.Maheswaran ,L.Subpuraj ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...