×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்த அரசுப் பேருந்து..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. பொன்னேரி அருகே உள்ள கட்டவூர் பகுதியில் வயலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் வழக்கமாக சாணாபுத்தூர் பகுதிக்கு ஓட்டி சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையிலிருந்து இரங்கி வயலில் விழுந்தது. பேருந்தில் இருந்த ஓட்டுநர் ரமேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்த அரசுப் பேருந்து..!! appeared first on Dinakaran.

Tags : Bonneri ,Thiruvallur district ,THIRUVALLUR ,Katavoor ,Sanaputhur ,Ponneri ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற...