×

நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போது குளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே, நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போது குளத்தில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி பலியான கல்லூரி மாணவனை, சுமார் 4 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்(19). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

ஞாயிறு விடுமுறை நாளான நேற்று முன்தினம் தமது நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற ஜெகன், குளத்தில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து, ஜெகனின் நண்பர்கள் அளித்த தகவலின் பெயரில், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமான நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்ட குளத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ரப்பர் படகு உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மாயமான கல்லூரி மாணவரை தீவிரமாக தேடினர்.

சுமார் 4 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சேற்றில் சிக்கிய கல்லூரி மாணவர் ஜெகன் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, ெஜகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போது குளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Bonneri ,Meenchur ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED எலும்பு கூடாக காட்சியளிக்கும்...