×

வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அபாய எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்கள், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் வீடுகள், கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதன் முன்னெச்சரிக்கையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரையில் 3 செ.மீ மழையும், காரைக்காலில் 5 செ.மீ மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ளது. மழை நீடித்து வருவதால் வீடூர் அணையில் நீர் நிரம்பி வெள்ளம் வரும் காரணத்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Collector ,Tenpennayar ,Puducherry ,Sankaraparani ,Tenpenna ,Karaikal ,Chatanur ,Vidur ,Tenpennayaur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!