×

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மைய எச்சரிக்கையால் மீனவர்கள் 3 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் 3,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Bay of Bengal ,Meteorological Department ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த...