×

கமலுடன் இணைந்து நடிக்கும் சிம்பு

சென்னை: கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சுடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. ‘இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் கமல்ஹாசன் இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் பட பாணியில் இந்த படமும் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என தகவல் பரவியுள்ளது.

The post கமலுடன் இணைந்து நடிக்கும் சிம்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Kamal ,Chennai ,Mani Ratnam ,Kamal Haasan ,Red Giant Movies ,Rajkamal Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar