×

முத்தையாபுரத்தில் மாதர் சங்கத்தினர் தெருமுனை பிரசாரம்

ஸ்பிக்நகர், டிச. 12: முத்தையாபுரத்தில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி புறநகர தலைவர் முத்துப்பேச்சி தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் பூமயில், புறநகர் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமாரி, நிர்வாகிகள் செல்வி, வள்ளி, உமா, ஹைருன்னிஷா, பொம்முத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலையில் ரேஷன் கடையில் வழங்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்தில் ஊழல் செய்த அதானியையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

The post முத்தையாபுரத்தில் மாதர் சங்கத்தினர் தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Matar Sangam street campaign ,Muthiyapuram ,Spiknagar ,Muttiahpuram ,Democratic Mother Sangh ,Muthuppechi ,District Secretary ,Bhumail ,Suburban Secretary ,Saraswathi ,District ,Committee ,Jayakumari ,
× RELATED தூத்துக்குடியில் பயங்கரம் ராஜபாளையம் லோடுமேன் சரமாரி வெட்டிக்கொலை