- சரணா
- சாரணியர் இயக்கத்தின் வைர விழா
- தேசிய ஜம்போரி
- சென்னை
- பள்ளி கல்வி அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- நூற்றாண்டு நினைவு வைரவிழா ஜம்போரி
- சாரணியர் வைரவிழா
- ஜம்போரி
- அமைச்சர்
சென்னை: பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடி மதிப்பில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சாரண சாரணியரின் பல்வேறு செயல்திட்டங்களை வெளியில் கொண்டு வரும் வகையில் மாவட்ட அளவில் பேரணிகள், கேம்பரிகளும், தேசிய அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜாம்போரிகளும் நடத்தப்படுகின்றன. சாரணர்களில், ஜாம்போரி என்பது தேசிய அல்லது சர்வதேச அளவில் அணிவகுத்துச் செல்லும் சாரணர்கள் அல்லது பெண் வழிகாட்டிகளின் ஒரு பெரிய கூட்டமாகும். இந்நிலையில், பாரத சாரண சாரணியர் இயக்க தேசிய தலைமையகம் ‘வைரவிழா பெருந்திரளி’ நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அந்த பெருந்திரள் அணியை தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் தொகுத்து வழங்க தேசிய தலைமையகத்தில் இருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள், திரிசாரண, திரிசாணியர்கள், சாரண,சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த பேரணி அக்டோபர் முதல் ஜனவரியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத சாரண, சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு வைர விழா தேசிய திரள் அணியாகவும், கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவாகவும் நடக்க இருக்கிறது.
இந்த விழாவை சிறப்பாக நடத்த அதிக நிதி தேவைப்படும் நிலையில் உத்தேச செலவுத்திட்ட மதிப்பு ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒப்புதல் வழங்க அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு நிதி ஒப்பளிப்பு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியில் இருந்து ரூ.10 கோடி வழங்கவும், மாநில அரசு நிதியில் இருந்து ரூ.5 கோடியும், ரூ.24 கோடியே 7 லட்சத்து 75ஆயிரம் பொது மற்றும் தனியார் பங்களிப்பு வாயிலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.
The post சாரண, சாரணியர் இயக்க வைர விழா ரூ.10 கோடியில் தேசிய ஜாம்போரி நடத்த திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.