×

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

டர்பன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்டில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி நேற்றிரவு டர்பனில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 8 2ரன் விளாசினார். ஜார்ஜ் லிண்டே 24 பந்தில் 48 ரன் எடுத்தார். கேப்டன் கிளாசென் 12 ரன்னில் அவுட் ஆனார். பாகிஸ்தான் பவுலிங்கில் ஷாகின்ஷா அப்ரிடி 4, அப்ரார் அகமது 3 விக்கெட் எடுத்தனர். டி20 போட்டியில் 100 விக்கெட் மைல் கல்லை எட்டிய அப்ரிடி, டி.20, ஒன்டே, டெஸ்ட் என 3வித போட்டியில் 100 விக்கெட்டை தாண்டிய பாகிஸ்தானின் முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

பின்னர் 184 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் டக்அவுட் ஆக கேப்டன் முகமது ரிஸ்வான் 62 பந்தில் 74 ரன் அடித்தார். சைம் அயூப் 31, தயப் தாஹிர் 18 ரன் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் 11ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. 48 ரன் அடித்ததுடன் 4 விக்கெட்டும் வீழ்த்திய ஜார்ஜ் லிண்டே ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி,20போட்டி செஞ்சூரியனில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி appeared first on Dinakaran.

Tags : South Africa ,T20 ,Pakistan ,Durban ,D20 ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்