×

குமரி அருகே கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது: படகில் இருந்து 9 பேர் பத்திரமாக மீட்பு!

குமரி: கன்னியாகுமரி அருகே கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 9 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் குளச்சல் பகுதியில் இருந்து 20 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது NUS என்ற எண்ணெய் கப்பல் விசைப்படகு மீது மோதியது. கப்பல் மோதியதில் விசைப்படகு சேதமடைந்தது.

இதனால் படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது. இதையடுத்து விசைப்படகில் இருந்த மீனவர்கள் 9 பேரை அந்த வழியாக சென்ற சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து அந்த விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பல் மோதியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குமரி அருகே கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது: படகில் இருந்து 9 பேர் பத்திரமாக மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Kulachal Fishing ,Port ,Kulachal ,Dinakaran ,
× RELATED குமரியில் பெட்ரோல் திருடும்போது தீ விபத்து..!!