- திருப்போரூர் ஓஎம்ஆர்
- Tiruporur
- நெடுஞ்சாலைகள் துறை
- செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை
- மாமல்லபுரம் சாலை
- திருப்பூர் வட்டப்பகுதி
- Navalur
- திருப்பூர் ஓ.எம்.ஆர்
- தின மலர்
திருப்போரூர்: திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையின் நடுவில் உள்ள மண், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கையால் அகற்றப்பட்டது. திருப்போரூர் ரவுண்டானா அருகில் இருந்து நாவலூர் வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையினை செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. எதிரெதிரே வரும் வாகனங்களின் பாதுகாப்பை கருதி பெரும்பாலான இடங்களில் சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை மற்றும் வேகமாக வீசும் காற்று ஆகியவற்றின் காரணமாக மண் பறந்து சாலைத்தடுப்பினை ஒட்டி சேர்ந்து விடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மண்ணில் சிக்கி விபத்தினை சந்திக்கின்றனர். இதையடுத்து, இப்பகுதி சமூக ஆர்வலர்கள் இந்த மண்ணை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மண்ணை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவினை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர், பணியாளர்கள் மூலம் இயந்திரங்களைக்கொண்டு சாலை தடுப்பினை ஒட்டி சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
The post திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் மண் அகற்றம் appeared first on Dinakaran.