×

வளசரவாக்கம் மண்டல அலுவலகம் முன்பு அம்மா உணவக பணியாளர்கள் தர்ணா

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 155வது வார்டில், மூன்று இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இதில் இருதரப்பு பெண் ஊழியர்கள் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண்பாடு காரணமாக ஏற்படும் தகராறு குறித்து சென்னை மாநகராட்சி அம்மா உணவக டி.ஆர்.ஓ. சோபியா மற்றும் மண்டல அதிகாரிகள் தலைமையில் நேற்று மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படாததால், 30க்கும் மேற்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஒரு தரப்பு பெண் ஊழியர்கள், நேற்று மாலை வளசரவாக்கம் மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வளசரவாக்கம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

The post வளசரவாக்கம் மண்டல அலுவலகம் முன்பு அம்மா உணவக பணியாளர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,Poontamalli ,Ramapuram Ward 155 ,Valasaravakkam Zone ,Chennai ,Amma ,
× RELATED வளசரவாக்கத்தில் பரபரப்பு சொகுசு காரில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை