×

தரவரிசை வெளியீடு இந்திய பல்கலை.களில் ஐஐடி டெல்லி நம்பர்-1

புதுடெல்லி: க்யூஎஸ் தரவரிசைப் பட்டியலில், நிலைத்தன்மைப் பிரிவில் இந்திய பல்கலைக்கழகங்களில் ஐஐடி டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து லண்டனைச் சேர்ந்த க்யூஎஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2025ம் ஆண்டுக்கான க்யூஎஸ் தரவரிசைப் பட்டியல் தற்போது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பட்டியலில் 107 நாடுகளைச் சேர்ந்த 1,740க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், நிலைத்தன்மை பிரிவில் இந்திய பல்கலைக்கழகங்களில் ஐஐடி டெல்லி முதல் இடத்தை பெற்றுள்ளது. உலகளாவிய தரவரிசையில் ஐஐடி டெல்லி 255 இடங்கள் முன்னேறி 171வது இடத்தை பிடித்துள்ளது. இப்பிரிவில் மொத்தம் 78 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் நாட்டின் டாப்-10 பல்கலைக்கழங்களில் 9 கல்வி நிறுவனங்கள் தங்கள் தரவரிசையில் முன்னேறி உள்ளன. 21 புதிய கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான பிரிவில் ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர் ஆகியவை டாப்-100 பட்டியலில் உள்ளன. சுற்றுச்சூழல் கல்விக்கான உலகின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) இடம் பெற்றுள்ளது.

The post தரவரிசை வெளியீடு இந்திய பல்கலை.களில் ஐஐடி டெல்லி நம்பர்-1 appeared first on Dinakaran.

Tags : IIT Delhi ,New Delhi ,QS ,London ,QS Institute ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...