×

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு முதல்வருக்கு கமல் பாராட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக்கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.

‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது, மக்கள் மீதான அவரது அக்கறையையும், இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது. மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனதார பாராட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு முதல்வருக்கு கமல் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kamal ,Chief Minister ,Chennai ,Makkal Neeti Maiyam ,president ,Kamal Haasan ,Tamil Nadu ,M.K.Stal ,Aritapatti ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...