×

ஜார்கண்டில் லாரியுடன் மோதல் ேபருந்து விபத்தில் 16 பயணிகள் பலி

பகூர்: ஜார்கண்ட் மாநிலம், சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் பர்ஹர்வாவில் இருந்து தியோகர் மாவட்டத்தின் ஜசிதி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது அதுவும், எதிரே வேகமாக வந்த லாரியும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது….

The post ஜார்கண்டில் லாரியுடன் மோதல் ேபருந்து விபத்தில் 16 பயணிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Parharwa ,Jharkhand's Sakibganj district ,Jasidi ,Deogarh district ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு