×

கண்ணாடியை பயன்படுத்தி சூரிய ஒளி: புதுப்புது முயற்சிகளால் பிரமிக்க வைக்கும் சீனா

சீனா: கண்ணாடியை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் சீனா மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காற்றாலை, சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது வழக்கம். கண்ணாடிகள் மூலம் மின் உற்பத்தியும் சாத்தியமா என்று நம்முள் பலர் யோசித்து இருக்க மாட்டோம். ஆனால் அதனை சாத்தியப்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சீனாவின் குயின்ஹாய் மாகாணத்தில் கோல்மத் சிட்டி என்ற பகுதியில் சோலார் அனல்மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

இங்கு குறிப்பிட்ட கோணத்தில் சூரிய ஒளியை கண்ணாடிகள் மீது 24 மணி நேரமும் விழ வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 188 மீட்டர் உயரம் கொண்டதாக இந்த மின் உற்பத்தி நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 120 மில்லியன் கிலோவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலையுடன் கண்ணாடி, சோலார் தகடுகளை பயன்படுத்தி இந்த மையம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

 

The post கண்ணாடியை பயன்படுத்தி சூரிய ஒளி: புதுப்புது முயற்சிகளால் பிரமிக்க வைக்கும் சீனா appeared first on Dinakaran.

Tags : China ,Dinakaran ,
× RELATED இந்திய – சீன உறவில் முன்னேற்றம்...