×

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபர் கவுதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் போராட்டம், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதம் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத் தொடர் தொடங்கிய மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் நோட்டீஸ்களை ஏற்க இரு அவைகளின் தலைவர்களும் மறுத்துவிட்டனர். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பகல் 12 மணிவரை இரு அவைகளையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரியும், கூட்டுக் குழு அமைக்கக் கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அவை நடவடிக்கைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

The post எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,US Justice Department ,Gautam Adani ,Manipur ,Uttar Pradesh ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...