×

டிவி சீரியலை தணிக்கை செய்து வெளியிட கோரி மனு: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு!!

மதுரை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்ய கோரிய வழக்கில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்;

தற்போது ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில், வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும், சொத்துக்காக குடும்பத்தை சிதைப்பது, சதித்திட்டம் தீட்டுவது, திருணமான பெண்ணை காதலிப்பது போன்ற வக்கிரங்கள் அதிகம் உள்ளன. பொதுநலன் கருதி, தற்போது வெளிவரும் டிவி மெகா சீரியலை தணிக்கை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சின்னத்திரை தணிக்கை வாரியத்தின் சான்றிதழை பெறாமல் சீரியலை வெளியிடுபவர்களுக்கு அபராதம் விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post டிவி சீரியலை தணிக்கை செய்து வெளியிட கோரி மனு: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Telecommunications Regulatory Commission ,Madurai ,Telecom Regulatory Commission ,High Court ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு