×

டிப்பர் லாரியில் மண் கடத்திய டிரைவருக்கு வலை

ஓசூர், டிச.10: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், காமன்தொட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் காமன்தொட்டியில் இருந்து ஓசூருக்கு 3 யூனிட் மண் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி உதவி இயக்குனர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிப்பர் லாரியில் மண் கடத்திய டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Mineral Resources Division ,Assistant Director ,Saravanan ,Kamanthotti ,Hosur ,
× RELATED பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம்...