×

மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்: அயர்லாந்து மகத்தான சாதனை

சிலெட்: வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்றுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, 3வது டி20 போட்டியிலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்துள்ளது. வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரு அணிகளும் 3 டி20 போட்டிகளில் ஆடி வந்தன. ஏற்கனவே முடிந்த 2 டி20 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றிருந்த அயர்லாந்து அணி, நேற்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் ஷோபனா மோஸ்தாரி 45, முர்ஷிதா காதுன் 12 ரன் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷர்மின் அக்தர் 34ல் வீழ்ந்தார். பின் வந்த வீராங்கனைகள் யாரும் ஜொலிக்கவில்லை.

20 ஓவர் முடிவில் வங்கதேசம், 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்தது. இதையடுத்து, 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் அயர்லாந்து வீராங்கனைகள் களத்தில் குதித்தனர். கேப்டன் கேபி லாயிஸ் 21, அமி ஹன்டர் 28 ரன் எடுத்து அவுட்டாகினர். பின் வந்தோர் பொறுப்புடனும் நிதானமாகவும் ஆடி வெற்றி இலக்கான 124 ரன்களை 6 விக்கெட் இழந்து எடுத்தனர். இதையடுத்து 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை அயர்லாந்து அணி ஒயிட்வாஷ் செய்து அபார சாதனை படைத்துள்ளது. ஆட்ட நாயகியாக லாரா டெலானியும், தொடர் நாயகியாக ஓர்லா பிரெண்டர்காஸ்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்: அயர்லாந்து மகத்தான சாதனை appeared first on Dinakaran.

Tags : Women's T20 series ,Bangladesh ,Ireland ,Sylhet ,Ireland women's cricket team ,T20 match ,Bangladesh Women's Cricket Team ,T20… ,Women's T20 ,Dinakaran ,
× RELATED மகளிர் டி20 2வது போட்டி அயர்லாந்து...