×

மகளிர் டி20 2வது போட்டி அயர்லாந்து பாய்ச்சலில் டங்கிய வங்கதேசம் : 47 ரன் வித்தியாசத்தில் அசத்தல்

சிலெட்: வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 2வது டி20 போட்டியில் சிறப்பாக ஆடி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 1-0 புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ள அயர்லாந்து அணி நேற்று சிலெட் நகரில் நடந்த 2வது டி20 போட்டியில் ஆடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் குவித்தது. ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 32, லாரா டெலானி 35 ரன் குவித்தனர்.

பின், 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகளான திலாரா அக்தர் 10, ஷோபனா மோஸ்தாரி 1 ரன்னில் வீழ்ந்து வலுவான அடித்தளம் அமைக்கத் தவறினர். பின் வந்த வீராங்கனைகள் ஏனோ தானோவென ஆடி, 17.1 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்னில் தோல்வியை தழுவினர். 47 ரன் வித்தியாசத்தில் வென்ற அயர்லாந்து மகளிர் அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி நாளை நடக்கிறது.

The post மகளிர் டி20 2வது போட்டி அயர்லாந்து பாய்ச்சலில் டங்கிய வங்கதேசம் : 47 ரன் வித்தியாசத்தில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Women's T20 ,Bangladesh ,Ireland ,Sylhet ,Ireland women's cricket team ,Ireland women's ,
× RELATED மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்: அயர்லாந்து மகத்தான சாதனை