- உ.பி.
- ஆந்திரா
- தெலுங்கானா
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- டிஜிபி
- பஞ்சாப்
- மேற்கு வங்கம்
- ஜார்க்கண்ட்
- நீதிபதி
- சஞ்சிவ் கன்னா
- தின மலர்
புதுடெல்லி: உபி, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பியில் பணி மூப்பு அடிப்படையில், 19வது இடத்தில் உள்ள, பிரசாந்த் குமார் என்ற ஐபிஎஸ் அதிகாரியை டி.ஜி.பி.,யாக நியமித்தது உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து 6 மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post உபி, ஆந்திரா, தெலங்கானா உள்பட 6 மாநில போலீஸ் டிஜிபி நியமனத்தில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.