×

சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி ஏற்றுமதி

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் வழியாக இந்தோனேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை துறைமுகத்தில் இருந்து பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனேசியாவிற்கு 5,100 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளை கப்பல் மூலம் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

திறமையான சரக்கு கையாளுதலை எளிதாக்குவதற்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் ஏற்றுமதி சந்தைக்கு ஆதரவளிப்பதற்கும் சென்னை துறைமுகத்தின் உறுதிப்பாட்டை இந்த ஏற்றுமதி காட்டுகிறது. மேலும் அரிசி போன்ற சுத்தமான சரக்குகளைக் கையாளும் துறைமுகத்தின் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனைக் காட்டுகிறது. கப்பல் முகவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள துறைமுக அதிகாரிகளால் இந்த ஏற்றுமதி சாத்தியமானது.

உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் சென்னை துறைமுகம் அர்ப்பணிப்புடன் உள்ளது என சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai port ,CHENNAI ,Indonesia ,Dinakaran ,
× RELATED கடந்த டிசம்பரில் 5.236 மி.மெ. டன்...