×

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார். இந்தக் கருத்தரங்கு எழும்பூா் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்ற நூலையும் முதல்வா் வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 24 ஆய்வாளா்கள் தொல்லியலாளா்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்குகிறார்கள்.

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் சா் ஜான் ஹீபா்ட் மாா்ஷல் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கி வைத்தார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : International Seminar ,Indus Cultural Invention ,Chennai ,Centennial of Indus Cultural Discovery ,Department of Archaeology of the Government of Tamil Nadu ,K. Stalin ,Rashambu Government Museum Art Gallery ,Indus Cultural Invention Centennial Completion Ceremony ,
× RELATED சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு...