×

ஓசூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

ஓசூர், டிச.9: கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில், ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் உள்ள தனியார் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவர் ரிது தலைமையில் குழுவினர், பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். சின்னஎலசகிரி, ஆனந்த் நகர், பாலாஜி நகர், கே.சி.சி.நகர், மீனாட்சிநகர் மற்றும் சிப்காட் தொழில்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.

ரத்த அழுத்தம் மற்றும் உடலின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு, கண் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், 20 பேருக்கு கண்புரை இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பாராவ், ராஜூ ஆகியோர் செய்திருந்தனர்.

The post ஓசூரில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri District Visual Loss Prevention Society ,Chinna Elasagiri ,Ritu ,St. Peter's Medical College Hospital ,Dinakaran ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி