×

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரண உதவி: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வழங்கினார்

சென்னை: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரண உதவிகளை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வழங்கினார். கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர். இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்தில் ஆழ்ந்தது. வயநாடு நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கி சுமார் 200 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை கூறினார். இதில் அப்துல் சமது எம்எல்ஏ, பேராசிரியர் ஹாஜாங்கனி கோவை உமர் உள்பட தமுமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரண உதவி: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Wayanad ,DMK ,Jawahirullah ,Chennai ,President ,Kerala ,Wayanad district ,TMMU ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் கேரள...