- கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர் சங்கம்
- மதுராந்தகம்
- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம்
- குமார்...
- தின மலர்
* மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
மதுராந்தகம்: மதுராந்தகத்தில், தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தொழிலாளி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என பாரபட்சம் இல்லாமல் ஒரே மாதிரி உதவித்தொகை வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த குறுஞ்செய்திகளை நல வாரியத்தின் மூலம் அனுப்ப வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் ஒப்புதல் செய்து உதவித்தொகை வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.8000 கட்டுமான வாரியத்தில் இருந்து தரப்பட வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சரா தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸாக ரூ.8000 கட்டுமான வாரியத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானஙகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.