×

நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்பிக்களுடன் பிரியங்கா ஆர்ப்பாட்டம்: வயநாட்டிற்கு சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

புதுடெல்லி: வயநாட்டிற்கு சிறப்பு நிதி ஒதுக்க கேட்டு கேரள மாநில எம்பிக்களுடன் இணைந்து பிரியங்கா காந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடநத ஜூலை 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், வயநாட்டில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்த ஒன்றிய அரசு, சிறப்பு நிதியையும் ஒதுக்கவில்லை. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவுக்கு சிறப்பு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், “வயநாட்டு மக்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்பிக்களுடன் பிரியங்கா ஆர்ப்பாட்டம்: வயநாட்டிற்கு சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Kerala ,Wayanad ,New Delhi ,Wayanad, Kerala ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...