×

இரட்டை இலையை வைத்து இன்னும் ஏமாற்ற முடியாது: எடப்பாடிக்கு டிடிவி குட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி பெண்ணிற்காக ஓடு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என நினைப்பவர்கள்.

எடப்பாடி போன்ற சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பணம் கொள்ளையடிப்பவர்கள் ஏதேதோ பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எனக்கு வருகின்ற தகவல்படி அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அம்மாவின் கட்சியில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரட்டை இலையை காண்பித்து தங்களை ஏமாற்ற முடியாது. இரட்டை இலை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக பலவீனமடைந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டுள்ளார்கள். அதையெல்லாம் மீட்டெடுக்க உண்மையான தொண்டர்கள் நினைத்து வருவதாக தகவல்கள் கிடைக்கிறது. இது ஒரு நல்ல செய்தியாகவே கருதுகிறேன். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களோடு வருவார்கள். இந்த கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘கடவுளே அஜித்’ என மாணவர்கள் கோஷம் வெளியேறிய டிடிவி

டிடிவி தினகரன் மேடையில் பேச துவங்கும்போது கீழே அமர்ந்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் திடீரென, ‘கடவுளே அஜித்’ என கோஷமிட்டனர். இதை கேட்ட டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகியிடம், ‘‘அவர்கள் என்ன கூறுகிறார்கள்?’’ என கேட்டார். அவர்கள் அளித்த பதிலில் அப்செட் ஆன டிடிவி தினகரன், மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து மட்டும் கூறி மேடைப் பேச்சை விரைந்து முடித்துக் கொண்டார். மீண்டும் பரிசுகள் வழங்கும்போதும் மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பியதால் சில மாணவர்களுக்கு மட்டும் பரிசுகளை வழங்கி விரைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது மாநகர அமமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post இரட்டை இலையை வைத்து இன்னும் ஏமாற்ற முடியாது: எடப்பாடிக்கு டிடிவி குட்டு appeared first on Dinakaran.

Tags : DTV Kuttu ,Edappadi ,Tirupur ,general secretary ,DTV ,Dhinakaran ,Tirupur Municipal Amma People's Development Association ,TTV ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு