×

இந்திய மகளிர் ஜோடி சாம்பியன்

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சிறப்பாக ஆடி சீன ஜோடியை நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. அசாமின் கவுகாத்தி நகரில், கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மின்டன் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வந்தது. இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இந்தியாவின் அஸ்வின் பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா ஸோ, வாங் ஜீ மெங் ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியின் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் இந்திய ஜோடி போராடி வென்றது. இருப்பினும் 2வது செட்டை 21-12 என்ற கணக்கில் எளிதாக வென்ற இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார், சீனாவின் ஸு ஸுவான் சென்னுடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டம் வென்றார்.

The post இந்திய மகளிர் ஜோடி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Indian Women ,Pairs ,Guwahati ,Guwahati Masters Badminton ,Guwahati Masters Super 100 Women's Badminton Championship ,Guwahati, Assam ,Indian Women's Doubles ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...