×

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தர்மபுரி, டிச.8: தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் 230 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி ஆணையர் சேகர் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் லட்சுமிநாட்டான் மாது மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், இதய நோய் கண்டறிதல், மகளிர் நலம் குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முன்னதாக, முகாமில் பங்கேற்ற அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்படுகளை தர்மபுரி நகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் லட்சியவர்ணா, துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன் மற்றும் சுசீந்திரன், ரமணசரண் ஆகியோர் செய்திருந்தனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Municipal Administration ,Municipal Commissioner ,Shekhar ,City Council ,President ,Lakshminathan… ,Special Medical Camp for Sanitation Workers ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்