- விஜய்
- அமைச்சர் ரகுபதி
- புதுக்கோட்டை
- அமைச்சர்
- ரகுபதி
- தமிழ்
- தமிழ்நாடு
- சட்டம்
- புதுக்கோட்டை
- திமுகா
- தின மலர்
புதுக்கோட்டை: பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக ஒரு கணக்கை போட்டால் சரியான கணக்கை தான் போடுவோமே தவிர, தப்பு கணக்கு போடும் வழக்கம் எங்களுக்கு கிடையாது. கூட்டல், பெருக்கல் விஜய்க்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம். திரைத்துறையில் வேண்டுமென்றால் எல்லா பிளஸ்-ம் இருக்கக்கூடிய ஒரு திரைப்படம் பிளாப் ஆகும். ஆனால் அரசியலில் எந்த பிளஸ்சும் மைனஸ் ஆவதற்கு வாய்ப்பு கிடையாது.
பிளஸ்சோடு பிளஸ் சேருகிற பொழுது அங்கு எண்ணிக்கை கூடுமே தவிர குறைவதற்கான வாய்ப்பு ஒன்றும் கிடையாது. பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கும் கிடையாது. வேறு யாருக்கும் கிடையாது. நாங்கள் போட்ட கணக்கு யாரும் மாற்ற முடியாத கணக்கு. சொந்த கணக்கை போடுபவர்கள். திருமாவளவன் அவரது விருப்பத்தை கூறியுள்ளார். அவருக்கு விருப்பம் இருந்திருந்தால் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருப்பார். திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக, விசிக கட்சிக்குள் நடக்கும் பிரச்னை அது நாங்கள் வெளியிலிருந்து அந்த கட்சிக்கு ஆலோசனை கூற முடியாது.
நாங்கள் மன்னராட்சி நடத்தவில்லை, ஜனநாயக ஆட்சி தான் நடத்துகின்றோம். எங்களிடம் வாரிசு அரசியல் கிடையாது. உழைப்பால் தான் வந்துள்ளோம். திமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் ஏற்றுக்கொண்ட தலைவர் தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அதே போல்தான் ஒவ்வொரு தொண்டனும் உதயநிதி ஸ்டாலின் உழைப்பை ஏற்றுக்கொண்டு அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று போராடி திமுக தொண்டன் பெற்று தந்த பொறுப்பு தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை. தமிழிசைக்கு இரட்டை வேடம், மூன்று வேடம் என்று சொல்வது தான் பழக்கம். அதன்படி இரட்டை வேடம், நான்கு வேடம் என்று கூறட்டும். இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் திருமாவளவனுக்கு கிடையாது. அவர் எதையும் துணிச்சலோடு சொல்லக்கூடியவர்.இவ்வாறு அவர் கூறினார்.
* ‘சேற்றில் கால் வைத்து பார்த்தால்தான் தெரியும்’
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘அமைச்சர்கள் போஸ் கொடுக்கிறார்கள் என்று விஜய் கூறுகிறார். நீங்கள் களத்திற்கு வர வேண்டியதுதானே. எங்களுடைய அமைச்சர்களை போல களத்தில் சேற்றில் இறங்கி வேலை பார்க்கும் அமைச்சர்களை பார்க்க முடியாது. அவர், சேற்றில் கால் வைத்து பார்த்தால் தெரியும். சினிமாவில் கால் வைப்பது வேறு, நிஜத்தில் கால் வைப்பது வேறு. கால் வைத்தால் தான் தெரியும் அவருக்கு’ என்றார்.
The post பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது: அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.