×

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது: எல்.முருகன் இரங்கல்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். அவரது மறைவுக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவருமான, மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார். இந்த துயரமான சமயத்தில் அவரைப் பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்,

The post ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது: எல்.முருகன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : EVKs ,Ilangovan ,L. Murugan ,Delhi ,Congress ,Erode East ,L. A. Vuma E. V. K. S. Ilangovan ,Union Deputy Minister ,Assembly ,of ,Erode East Assembly Constituency ,Tamil ,
× RELATED அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட...