சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலின் போது தன்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அப்போது தனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின், தனக்கும், தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2021ல் பாதுகாப்பு விலக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் தனக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன் வரவில்லை தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தும் தரவில்லை.
தற்போது தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால் இதுசம்பந்தமாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் இதுவரை 20 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுசம்பந்தமான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 2025 ஜனவரி 3ம் தேதிக்குள் பதிலளிக்க அரசு, காவல் துறை மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
The post உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக புகார் சிபிஐ விசாரணை கோரி சி.வி.சண்முகம் மனு: அரசு, போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.